06.07.2018 வெள்ளிக்கிழமையன்று அரசு/ நலத்துறை மற்றும் நிதியுதவி உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாதாந்திர கூட்டம் அரசு(முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் – High School HMs @4.00pm & Hr.Sec.HMs @ 5.00 PM

06.07.2018 வெள்ளிக்கிழமையன்று அரசு/ நலத்துறை மற்றும் நிதியுதவி உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாதாந்திர கூட்டம் கீழ்க்கண்டவாறு அரசு(முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.

நேரம்

மாலை 4.00 மணி – அரசு/நிதியுதவி மற்றும் நலத்துறை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்

மாலை 5.00 மணி – அரசு/நிதியுதவி மற்றும் நலத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்

கூட்டப்பொருள்:

  1. வினாத்தாள் பகிர்வு மையத் தலைமையாசிரியர்கள் பள்ளியிலிருந்து பெறப்பட்ட வினாத்தாள் உத்தேச தேவைப்பட்டியலை ஒருங்கிணைப்பாளரிடம் மற்றும் அதற்கான கட்டணத்திற்கான DDஐ கீழ்காணும் முகவரியில் ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

     DD favour of : – CEO DISTRICT COMMON EXAM

     Venue: –  Sri Venkateswara Hr.Sec.School, Vellore – தினந்தோறும் மாலை 4.00 மணி முதல் 5.00 மணிவரை

1) 2018-19ஆம் கல்வியாண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கழக ஆண்டு சந்தா

உயர்நிலைப்பள்ளிகள் – ரூ.460/-

மேல்நிலைப்பள்ளிகள் – ரூ.660/-

தலைமையாசிரியர் கூட்டத்தில் ‘ஆ5’ பிரிவு எழுத்தரிடம் ரொக்கமாக செலுத்தி  உரிய இரசீதினை  பெற்றுக்கொள்ள வேண்டும்.

2) 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தங்கள் பள்ளியின் அனைத்து வகுப்புகளுக்கான கால அட்டவணை  மற்றும் பாட ஆசிரியர்களுக்கான கால அட்டவணை – உயர்நிலைப்பள்ளிகள் நேர்முக உதவியாளர் (இடைநிலை) அவர்களிடமும், மேல்நிலைப்பள்ளிகள், நேர்முக உதவியாளர் (மேல்நிலை) அவர்களிடமும் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3) பள்ளி வேலை நேரம் காலை முதல் மாலை வரை.

4) காலிப்பணியிட விவரம் படிவம் -1 மற்றும் படிவம்-2 பூர்த்தி செய்து கூட்டத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

5) மாற்றுத்திறனாளிகள் விவரம் மற்றும் ஆங்கில வழியில பயிலும் மாணவர்கள் விவரம்

    மேற்படி விவரங்களை தலைமையாசிரியர் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கும்படி அனைத்துவகை தலைமயாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.