மொழிகள் ஆய்வகம் – LANGUAGE LAB | BASELINE ASSESSMENT| HI TECH LAB | CLASS 6-8

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய அனைத்து மாணவர்களும் 12.02.2024 முதல் 20.02.2024 வரை 7 வேலை நாட்களுக்குள் மொழிகள் ஆய்வகத்தில் Baseline Assessment செயல்பாட்டினை நிறைவு செய்ய வேண்டும்

1) அனைத்து மாணவர்களும் 100% பங்கேற்க வேண்டும்

2) SOP படி செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்

3) தங்கள் பள்ளி ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து பணிகளை முடிக்க வேண்டும்

4) ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தேர்வு பணிகள் இல்லாத ஆசிரியர்களை கொண்டு பணிகளை முடிக்க வேண்டும்

5) பள்ளி நேரத்தில் மட்டுமே Assessment மேற்கொள்ள வேண்டும்

6) THIN CLIENT SYSTEM இல் LOGIN செய்ய வேண்டிய முகவரி

https://mozhigal.tnschools.gov.in/login

*USERNAME*

STUDENTS 10 DIGIT NEW EMIS ID

*PASSWORD*

LAST 4 DIGIT OF EMIS ID @ YEAR OF BIRTH

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் மாவட்டம்