VIT பல்கலைக்கழகத்தில் 11.10.2023 அன்று நடைபெற உள்ள திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் அனைத்து அரசு /நிதியுதவி பெறும் நடுநிலை /உயர்நிலை/மேனிலைப் பள்ளிகளில் இருந்ததும் ஒரு மாணவர் வீதம் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியின் அதிகாரங்கள் மற்றும் போட்டி சார்ந்த தகவல்கள் PDF ல் அளிக்கப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து சிறந்த மாணவர் ஒருவரை தேர்வு செய்து போட்டியில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
மேலும்
தேர்வு செய்யப்பட்ட மாணவரின் விபரங்களை கீழ் காணும் G-form ல் பதிவு செய்ய வேண்டும் (Registration Purpose)
https://forms.gle/5EYE9ejkgUQNdKj98
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்
பெறுநர்
அரசு/அரசு நிதியுதவி பெறும் நடுநிலை/உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)
மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)
(தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு/அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு )