2022-2023 ஆம் கல்வியாண்டில் மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களை ஜூன் /ஜூலை -2023 மாதத்தில் நடைபெறவுள்ள துணைத்தேர்வில்  தேர்ச்சி பெற மாணவர்களை  ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு வழிகாட்டுதல்கள் இடம் மற்றும் நேரம் மாற்றம் செய்த விவரம் பள்ளிகளுக்கு தெரிவித்தல்-சார்பு

அனைத்து அரசு /ஆதிதிராவிட நல /நகரவை /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

 2022-2023 ஆம் கல்வியாண்டில் மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களை ஜூன் /ஜூலை -2023 மாதத்தில் நடைபெறவுள்ள துணைத்தேர்வில்  தேர்ச்சி பெற மாணவர்களை  ஊக்குவிக்கும் வகையில்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரப்படி உரிய நாளில் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இதுகுறித்து பாட வாரியாக  கையேடுகள் முதன்மைக் கல்வி அலுவலக edwise vellore Website –ல்  data-வில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் Edwise Vellore–>Datauser id–>paassword பயன்படுத்தி  பாடவாரியாக கையேடுகள் பதிவிறக்கம் செய்து தேர்ச்சி பெறாத  மாணவர்களுக்கு வழங்கி இணைப்பில் தரப்பட்டுள்ள பாட வாரியாக கீழ்க்குறிப்பிட்டுள்ள நாட்களில் நடைபெறும் சிறப்பு வழிகாட்டி மையத்திற்கு மாணவர்களை  பொறுப்பு ஆசிரியர்களுடன் அழைத்து வர அனைத்து அரசு /ஆதிதிராவிட நல /நகரவை /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.     

தங்கள் பள்ளியில் 11 –ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் விவரம் பாடம் வாரியாக மற்றும் தேர்விற்கு விண்ணபித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவர்களின் விவரங்களை தங்கள் ஒன்றியங்களுக்கு ஓதுக்கப்பட்டுள்ள தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க  அனைத்து அரசு /ஆதிதிராவிட நல /நகரவை /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மீள  தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1GEkVTBX_1pfvC8r7QYTeFl6f9BbAjMTsHF3Wlx5upGA/edit?usp=sharing

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக்
கல்வி அலுவலர்

வேலூர் .

பெறுநர்

அனைத்து அரசு
/ஆதிதிராவிட நல /நகரவை /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர்
மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக்
கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்
அனுப்பப்படுகிறது.