அனைத்துவகைபள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்கள் – EMIS ONLINE PORTAL-லில் மாணவர் விவரங்களை பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல்

அனைத்துவகைபள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

 

EMIS ONLINE PORTAL மாணவர் விவரங்களை பதிவுகள் மேற்கொள்ள செயல்பாட்டில் உள்ளது (Activate செய்யப்பட்டுள்ளது). எனவே, அனைத்துவகை பள்ளிகளும் புதிய சேர்க்கைகள் மேற்கொள்ளும்போது (1ம் வகுப்பு) உடனடியாக மாணவர்கள் விவரங்களை பதிவிடவேண்டும். மேலும், மற்ற வகுப்புகளுக்கு பிற பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு சேர்க்கை செய்து உடனடியாக சார்ந்த மாணவர்களது விவரங்கள் தங்கள் பள்ளியின் EMIS LISTல் இணைத்துக்கொள்ள வேண்டும். மாறுதல் சான்றிதழ்  (TC) வழங்கப்பட்டிருப்பின் சார்ந்த மாணவர்கள் விவரங்களை COMMON POOL-ற்கு  உடனடியாக அனுப்பப்பட வேண்டும்.

ஏற்கனவே பதிவு செய்த மாணவர் விவரங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றையும் திருத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.