இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் – காலி பணியிட விவரம் – தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் படிவம் சமர்ப்பிக்காத பள்ளிகள் விவரம் இணைக்கப்பட்டுள்ளது – சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நாளை (21.04.2023) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக “அ3” பிரிவில் சமர்ப்பிக்க தெரிவித்தல் – சார்பு.

அனைத்து அரசு / நகரவை / மாதிரி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் காலி பணியிட விவரம், தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் படிவம் சமர்ப்பிக்காத பள்ளிகள் விவரம் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நாளை (21.04.2023) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக “அ3” பிரிவில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறார்கள். பள்ளிக் கல்வி ஆணையரகத்திற்கு தொகுப்பறிக்கை அனுப்புவதில் காலதாமதம் ஏற்படின் பின் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்