வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு /நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவி உயர் , மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் காணும் GOOGLE FORMS- ல் உள்ளீடு செய்யுமாறு தெரிவ்க்கப்பட்டது .ஆனால் இதுநாள் வரை சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , தங்கள் பள்ளிக்குரிய ஆசிரியர்கள் (ம ) பணியாளர்களின் விவரங்களை Google Forms –ல் உள்ளீடு செய்யாமல் இருப்பது வருந்தத்தக்க செயலாகும்.மேற்காண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டி உள்ளதால் காலதாமதத்தினை தவிர்க்கவும்.
மேலும் உடனடியாக தங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர் /அலுவலக பணியாளர்களின் விவரங்களை GOOGLE FORMS –ல் பதிவு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து 12.12.2022 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் தனி நபர் மூலம் சமர்பிக்குமாறு அனைத்து அரசு / நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவிப் உயர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://forms.gle/ZDrSHpDFGoG2CBuK9
//ஓம் //
க.முனுசாமி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்,
அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மற்றும் மெட்ரிக் முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.
நகல்,
மாவட்ட கல்வி அலுவலருக்கு ( இடைநிலை/தனியார்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு