தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் 2022 தொடர்பான செய்தி

அனைத்து வகை (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி / மெட்ரிக் / CBSE / ICSE உட்பட) மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

தங்கள் பள்ளியில்  பயிலும் 11ம் வகுப்பு மாணவர்களை தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்விற்கு அதிக அளவில் பங்கேற்கும் வகையில் மாணவர்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி / மெட்ரிக் / CBSE / ICSE உட்பட) மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு

வேலூர் மாவட்டத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை இன்று மாலை 04.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) அவர்களிடம் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து வகை (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி / மெட்ரிக் / CBSE / ICSE உட்பட) மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.