அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
தமிழ்நாடு அரசுப்பணியாளர் 2006-2007 தொகுதி IV-ல் இளநிலை உதவியாளர்/தட்டச்சர்/ சுருக்கெழுத்து தட்டச்சராக நியமனம் செய்யப்பட்டது – ஒருநபர் ஊதியக் குழுவின்படி ஊதியம் திருத்தியமைத்தது தொடர்பாக விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள ஆணையரின் செயல்முறைகளில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 02.09.2022 காலை 11.00 மணிக்குள் velloreceo@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், எவரும் இல்லை எனில் ‘இன்மை‘ அறிக்கையினை மேற்குறிப்பிட்டுள்ள மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.
இது மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்தி விவரத்தினை உடனடியாக அனுப்பிவைக்கும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்