நாளை (19.02.2022) நடைபெறும் தேர்தல் பணிக்காக ஆணை பெற்ற ஆசிரியர்கள் உடனடியாக வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லுமாறும், மேலும் ஆணை பெறாத ஆசிரியர்கள் இன்று (18.02.2022) தேர்தல் பயிற்சி வகுப்பு  நடைபெறும் மையத்திற்கு சென்று உடனடியாக ஆணை பெற்று வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லுமாறு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு,

நாளை (19.02.2022) நடைபெறும் தேர்தல் பணிக்காக ஆணை பெற்ற ஆசிரியர்கள் உடனடியாக வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லுமாறும், மேலும் ஆணை பெறாத ஆசிரியர்கள் இன்று (18.02.2022) தேர்தல் பயிற்சி வகுப்பு  நடைபெறும் மையத்திற்கு சென்று உடனடியாக ஆணை பெற்று வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில்  தேர்தல் விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்ட வட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஆணை பெற்ற ஆசிரியர்களை சார்ந்த தலைமையாசிரியர்கள் உடனடியாக பணியிலிருந்து விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடுவிக்க தவறிய தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கோரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்