ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு,
தேர்வு நடைபெறும் நாட்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கட்டுக்காப்பு மையங்களிலிருந்து வழித்தட அலுவலர்கள் மூலமாக Handwash Liquid வழங்கப்படவுள்ளது. அதனை பெற்று தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கு முன்பாக துறை அலுவலர், Squard மற்றும் முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மாணவர்கள் அனைவரும் கைகளை கழுவ முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திட பள்ளிக்கல்வித்துறை மூலமாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்வை புகைப்படமெடுத்து இவ்வலுவலக மின்அஞ்சல் முகவரிக்கு (velloreceo@gmail.com) அனுப்பிவைக்கும்படி அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு மைய தலைமையாசிரியர்கள் இப்பொருளில் தனி கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.