மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவுகள் நீங்கலாக) மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டமை – எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு மற்றும் அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவுகள் நீங்கலாக) மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்திசெய்து 18.02.2020 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’பிரிவில் ஒப்படைக்கும்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு சில பள்ளிகளில் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை விவரத்தினை ஒப்படைக்காமல் உள்ளனர். எனவே, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று (20.02.2020) மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இணைப்பினை Click செய்து மாணவர் வங்கிக்கணக்கு துவங்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை விவரத்தினை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT