2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்கள் சார்ந்து

அரசு/ அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள்

2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்கள் நாளது தேதி வரை சமர்ப்பிக்காத     பள்ளித்தலைமையாசிரியர்கள் இன்று (20.12.2019) மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு / அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தொகுத்தனுப்ப வேண்டிய நிலையில் உள்ளதால் இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி உடன் சமர்ப்பிக்குமாறு அரசு/ அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாமதமாக சமர்ப்பிக்கப்படும் பள்ளிகளுக்கு மடிக்கணினி பெற்று வழங்க இயலாத நிலை ஏற்படின் விளைவுகளுக்கு சார்ந்த தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

Laptop

Pending Schools