2025-2026ஆம் கல்வியாண்டில் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter District) பொதுமாறுதல் 15.07.2025 முதல் 23.07.2025 வரை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும். மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter District) பொதுமாறுதல் கலந்தாய்விற்கான முன்னுரிமை பட்டியல் பாடவாரியாக கீழ்காணும்படி இணைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்து கொள்ள ஏதுவாக தகவல் தெரிவிக்குமாறு அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 15.07.2025 அன்று நடைபெறும் பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை பட்டியலில் 1 முதல் 250 வரை இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்) கலந்துக்கொள்ள வேண்டும்.
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுர்
தலைமையாசிரியர்கள்,
அனைத்து அரசு / நகரவை உயர் /மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
