2025-2026ஆம் கல்வியாண்டிற்கான சிறப்புக் கட்டண இழப்பீட்டு தொகை பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்க ஏதுவாக இவ்வலுவலக 11.08.2025 நாளிட்ட செயல்முறைகளின்படி பள்ளிகளில் இருந்து விவரங்கள் கோரப்பட்டது. தற்போது கூடுதல் தேவை ஏதுமிருப்பின் அவ்விவரங்களை இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் பூர்த்தி செய்து (கூடுதல் தேவை மட்டும்) தலைமையாசிரியர் கையொப்பத்துடன் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 19.09.2025 அன்று மாலை 03.00 மணிக்குள் சமர்ப்பிக்க அனைத்து வகை அரசு/நகரவை/அரசுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் நாளது தேதி வரை பயனீட்டுச் சான்று சமர்ப்பிக்காத பள்ளிகள் படிவத்துடன் பயனீட்டு சான்றினையும் இணைத்து சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.