Month: June 2024

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது – பயன்படுத்தப்படாமல் இருப்பின் அது குறித்த விவரம்  கோருதல் – சார்பு

CIRCULARS
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு இதுநாள் வரையில் பயன்படுத்தப்படாமல் இருப்பின் அது குறித்த விவரங்களை இணைப்பில் உள்ள Google Sheet Linkல் உடனடியாக பூர்த்தி செய்யுமாறும் இப்பொருள் சார்பாக விவரங்கள் ஏதும் இல்லையெனில் இன்மை அறிக்கையினை அளிக்க வேண்டும் எனவும் அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 2165-A5-High-Higher-secondary-NEW-BULING-RegDownload https://docs.google.com/spreadsheets/d/1t03f1QBOhk_3gRi86E59i54kqQ3hgIoxhvD55cmmZOo/edit?usp=sharing\ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

NEET Results 2023-2024 தகவல்களை G sheet ல் பதிவு செய்தல் சார்பு

அனைத்து மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு அரசு மற்றும் நிதியுதவி மேனிலைப் பள்ளிகளில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பெயர் மற்றும் மதிப்பெண் விவரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது G sheet linkhttps://docs.google.com/spreadsheets/d/1yKpybKTkZQnl1NXyRGvSVW3doEZVg-dQJJsGvRVxFC0/edit?usp=drivesdk முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

பள்ளிக்கல்வி – 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறத்தல் – தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் ( SOP) – தொடர்பாக

CIRCULARS
2024 – 2025 ஆம் கல்வி ஆண்டில் 1  முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜுன் 10ஆம் தேதி  பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் உரிய செயல்பாடுகள் மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திட  அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 2101-B1-School-Reopen-SOP-regDownload School-Reopen-SOP-2024-25Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள். வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் -2024 -விடைத்தாள் மறுமதிப்பீடு /மறுக்கூட்டல் – விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்வது மற்றும் விண்ணப்பத் தொகையினை – ஆன்லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக

SSLC-2024-RV-RT-Scan-Downloading-Instructions-to-ADDownload SSLC-2024-RV_RT-FEES-PAYING-PROCEDURE-KARUVOOLAM-WEBSITEDownload sslc-2024-downloading-of-answer-scripts-and-rt-rv-application-press-notificationDownload ஓம். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு

கீழ்காணும் G-Sheet ல் உள்ள விவரங்கள் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் கோரப்படுவதால் இதில் தனி கவனம் செலுத்தி இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளவர்கள் (Suspension) நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள் (Un Authorised Absent) மகப்பேறு விடுப்பில் உள்ளவர்கள் https://docs.google.com/spreadsheets/d/11Bn-JitvFz-NN1ninU_cR93HoWGpMB6zIr5fk9OGTxc/edit#gid=0 முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம், அரசு மற்றும் நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை – உபரி பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள் சரிபார்த்து சான்று வழங்க கோருதல் – சார்பாக

CIRCULARS
அரசு மற்றும் நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு, வேலூர் மாவட்டம், அரசு மற்றும் நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தது, உபரி பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள் சரிபார்த்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி சான்று மற்றும் படிவங்கள் சமர்ப்பிக்க சார்ந்த தலைமையாசிரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. 3434-A3-Deployment-03.06.2024Download Form_1Download Form_2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள், அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டம் “புதுமைப் பெண் திட்டம்” – 2023-2024ம் ஆண்டில் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தமிழ்வழி கல்வியில் பயின்று பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவியர்களின் எண்ணிக்கை விவரம் – கோருதல் – தொடர்பாக    

CIRCULARS
பள்ளிக் கல்வி – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டம் “புதுமைப் பெண் திட்டம்” – 2023-2024ம் ஆண்டில் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தமிழ்வழி கல்வியில் பயின்று பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவியர்களின் எண்ணிக்கை விவரம் – கோருதல் - தொடர்பாக     2155.B5.03.06.2024-Pudhumai-Pen-thittamDownload// //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 –திருநெல்வேலி மாவட்டம், திரு.எஸ்.ஜெபராஜ்  என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப கோருதல் – சார்பு

CIRCULARS
தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள செயல்முறைகளில் கோரியுள்ள தகவல்களை வழக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. RTI-2142-A4-jabaraj-ADownload Jabaraj-RTI-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமையாசிரியர் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம்