Month: September 2022

பதிவுரு எழுத்தர்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணி நிரவல் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) நாளை (01.10.2022) காலை 7.30 மணிக்கு வேலூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்

CIRCULARS
முதன்மைக்கல்வி / மாவட்டக்கல்வி / வட்டாரக்கல்வி அலுவலர்கள், அனைத்து அரசு /நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பதிவுரு எழுத்தர்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணி நிரவல் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) நாளை (01.10.2022) காலை 7.30 மணிக்கு வேலூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளதால் இணைப்பில் உள்ள முன்னுரிமைப்பட்டியலை சரிபார்த்து திருத்தம் இருப்பின் காலை 7.30 மணிக்கு நேரில் தெரிவிக்குமாறு சம்மந்தப்பட்ட பணியாளருக்கு அறிவுரை வழங்கி கலந்தாய்வில் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்ப அலுவலர்கள் மற்றும்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஏதேனும் திருத்தம் இருப்பின் அதற்கான உரிய சான்றுகளுடன் நேரில் வருமாறு சார்ந்த பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். List -RC-Details-2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அக்டோபர் 2022 – தேர்வுக்கூட அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்தல் சார்பு

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அக்டோபர் 2022 தேர்வுக்கூட அனுமதி சீட்டு 29-09-2022 முதல் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்ற செய்திக்குறிப்பு சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இத்தகவலினை அனைத்து பள்ளியின் தகவல் பலகை மற்றும் சுற்றறிக்கை மூலமாக அனைத்து மாணவர்களுக்கம், ஆசிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். eslc-hall-ticket-downlaodDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்

அரசு/ அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டது தொழிற்கல்வி பயிற்றுநர்களை 03.10.2022 அன்று அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பணியில் சேரும் வகையில் விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டது தொழிற்கல்வி பயிற்றுநர்களை 03.10.2022 அன்று அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பணியில் சேரும் வகையில் விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய நேரத்தில் சார்ந்த தொழிற்கல்வி ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். VT-REPORTING-TO-SCHOOLS-PROCEEDINGSDownload TN-VE-Vocational-Trainers-Mapping-Oct-2022-Final-listDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

காலாண்டு தேர்வு விடுமுறை குறித்து அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, காலாண்டு தேர்வு விடுமுறை குறித்து அறிவுரைகள் சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 377-b1Download Quarterly-leave-instructions0000001ADownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தினரால் World Space Week 04.10.2022 முதல் 10.10.2022 வரை கொண்டாடுதல் சார்பாக.

CIRCULARS
தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை  நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகள் அனைத்து வகை மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தினரால் World Space Week 04.10.2022 முதல் 10.10.2022 வரை கொண்டாடுதல் தொடர்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் அறிவியலில் ஆர்வம் கொண்ட மாணாக்கர்களை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து வகை பள்ளி மாணாக்கர்களிடையே அறிவியல் சார்ந்த போட்டிகள் 07.10.2022 முதல் 09.10.2022 வரை நடத்த திட்டமிடப்பட்டு, அனைத்து போட்டிகளும் வேலூர் மாவட்டம், VIT நிறுவனத்தில் நடத்தப்படவுள்ளது. பங்கு பெறும் அனைத்து மாணாக்கர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். இந்நிகழ்வு பள்ளி மாணவர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பா

வேலூர் மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம்/ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம்/ மாவட்டக் கல்வி அலுவலகம் / வட்டாரக் கல்வி அலுவலகம்/ அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு , அனைத்து வகையான அமைச்சுப்பணியாளர்களின் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர்கள்/ இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் மாறுதல் கலந்தாய்வு ஏற்கனவே அறிவித்தப்படி 29.09.2022 அன்று காட்பாடி காந்திநகர், (SSA ) அலுவலகத்தில் நடைபெறும் . இதில் இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களுக்கு, காலை 10.00 மணியளவிலும், உதவியாளர்களுக்கு மதியம் 02.00 மணியளவிலும் நடைபெறும். இதன் பொருட்டு சம்மந்தப்பட்ட பணியாளர்களை விடுவித்து அனுப்பும்படி சார்ந்த அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், முதன்மைக் கல்வி அலுவலகம்/ ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவலகம்/ மாவட்டக் கல்வி அலுவலகம் / வட்டாரக் கல்வி அலுவலகம்/ அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

தொழிற்கல்வி பாடம் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்பு

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து அரசு / நகரவை / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 4223-B3Download internship-form1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு / நகரவை / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – STEM – மகிழ் கணிதம் Key Resource Person -Geo Gebra பயிற்சிக்கு ஆர்வமுள்ள ஆசிரியர்கள் மட்டும் பதிவு செய்ய கோருதல்

CIRCULARS
அரசு/அரசு உதவிபெறும் நடுநலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - STEM - மகிழ் கணிதம் Key Resource Person -Geo Gebra பயிற்சிக்கு ஆர்வமுள்ள ஆசிரியர்கள் மட்டும் பதிவு செய்ய கோருதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/அரசு உதவிபெறும் நடுநலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பதிவு செய்யும் படி அறிவுறுத்தும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SS-VLR-STEM-Geogebra-KRP-Registration-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – அனைத்து அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை கூட்டம் நடத்துதல் வழிகாட்டுதல்கள் வழங்குதல்

CIRCULARS
சார்ந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - அனைத்து அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை கூட்டம் நடத்துதல் வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Vellore-SMC-School-Level-Monthly-Meeting-reg-30.09.2022Download Attendance: https://bit.ly/SMCAppAttendancePlanning Part 1: https://bit.ly/SMCSDP1Planning Part 2 : https://bit.ly/SMCSDP2Planning Part 3: https://bit.ly/SMCSDP3Playlist link: https://bit.ly/SMCSupportVideos முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் – மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் – சிறப்புப் பள்ளிப்பிரிவு – மாற்றுத் திறனாளி மாணவ/ மாணவியர்கள் தேசிய கல்வி உதவித் தொகை வழங்கும்திட்டம் – அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ/ மாணவியர்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க அறிவுறுத்த தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமயாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் - மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் - சிறப்புப் பள்ளிப்பிரிவு - மாற்றுத் திறனாளி மாணவ/ மாணவியர்கள் தேசிய கல்வி உதவித் தொகை வழங்கும்திட்டம் - அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ/ மாணவியர்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க அறிவுறுத்த தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஓ.மு.எண்.4197/ஆ3/2022, நாள் .09.2022 (நகல்) தகவலுக்காகவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. 35951Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்