Month: April 2022

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்- தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதுதல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது – நடைமுறைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்- தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதுதல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது - நடைமுறைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Disaster-_20220407_0001Download A4-2315-2022-04-04-2022-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு) / இடைநிலை பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு 2022 – குறைக்கப்பட்ட பாடத்திட்டம் – பாடங்களை விரைந்து முடிக்கவும் – தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்துதல் சார்பாக அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, சென்னை, அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்திற்கிணங்க 2021-2022ம் கல்வி ஆண்டிற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாட திட்டத்தின்படி மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு)/ இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு மே 2022க்கான வினாத்தாட்கள் வழங்கப்படவுள்ளது.                         எனவே, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தினை அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் விரைந்து முடிக்கவும் மேலும், தேர்விற்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings-2Download

All – Govt/Mpl High and Hr.Sec.School HMs – நாளை (07.04.2022) சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு வரும்போது தலைமையாசிரியர்கள் இணைப்பில் கண்ட படிவங்களை (படிவங்கள் 1 மற்றும் 2) பூர்த்தி செய்து கூட்ட அரங்கில் நேரடியாக பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்து அரசு /நகரவை உயர் மற்றும் மேல்நிலைபப்ள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு /நகரவை உயர் மற்றும் மேல்நிலைபப்ள்ளி தலைமையாசிரியர்கள் நாளை (07.04.2022) சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு வரும்போது இணைப்பில் கண்ட படிவங்களை (படிவங்கள் 1 மற்றும் 2) பூர்த்தி செய்து கூட்ட அரங்கில் நேரடியாக பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், நாளை (07.04.2022) சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி  (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான ஆயத்தக்கூட்டத்திற்கு சரியாக காலை 9.30க்குள் வருகைபுரியும்படியும்,  கால தாமதமாக வரும் தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதியில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. Forms-1-an

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் தொடர்பாக தலைமைஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கான ஆயத்தக்கூட்டம் நடைபெறும் இடம் மாற்றம் – 07-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர் சத்துவாச்சாரி, ஹோலிக்கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர் / அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் ஆயத்தக்கூட்டம் 07-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர் லஷ்மிகார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது கூட்டம் நடைபெறம் இடம் மாற்றம் செய்யப்படுகிறது. சத்துவாச்சாரி, ஹோலிக்கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 07-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. அனைவரும் (காலை 08.45 மணி முதல் காலை 09.15 மணி வரை தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் வருகைப் பதிவு ) கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் வருகை புரியுமாறும் அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொ

01.01.2022 நிலவரப்படி – பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கருத்துருக்கள் 05.04.2022 அன்று சமர்ப்பிக்க கோரியது – தகுதிவாய்ந்தவர்கள் இல்லை எனில் பாடவாரியாக தனித்தனியாக இன்மை அறிக்கை சமர்ப்பிக்க கோரியது – விவரங்கள் அளிக்காத பள்ளிகள் – உடன் விவரம் அளிக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 01.01.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களிடமிருந்து கருத்துருக்கள் பெற்று அனுப்பவும், தகுதிவாய்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கு எவருமில்லை எனில் (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், மனையியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1) என பாடவாரியாக இன்மை அறிக்கை 05.04.2022 அன்று மாலை 3.00 மணிக்குள் ஒப்படைக்க கோரி 28.02.2022 அன்று edwizevellore.com இணைய தளம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. கீழ்காண் தலைமையாசிரியர்கள் விவரங்கள் சமர்ப்பிக்காதது வருந்தத்தக்கதாகும். எனவே, 06.04.2022 அன்று  நன்பகல் 12.00 மணிக்குள் தவறாமல் கருத்துருக்களை முதன்மைக்கல்வி அலுவலக ‘அ4‘ பிரிவில் நேரில் ஒப்படைக்க த

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் வழங்கிய கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Internal-Mark-Uploading-InstructionsDownload Internal-Code-for-1Download Internal-Code-for-2Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொட

மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செய்முறை தேர்விற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தயார்நிலையில் இருக்க உரிய அறிவுரைகளை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு 1-Practical-2022-InstructionsDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு தொடர்பாக அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செய்முறை தேர்விற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தயார்நிலையில் இருக்க உரிய அறிவுரைகளை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 2-Practical-Instructions-May-2022Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் ஆயத்தக்கூட்டம் 07-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர் லஷ்மிகார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுதல் சார்பு

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆயத்தக்கூட்டம் 07-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர் லஷ்மிகார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 903-2022-exam-HM-meetingDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. வேலூர் அ

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மரம் நடும் திட்டத்தின்கீழ் மரம் நடும் செயல்பாட்டினை மேற்கொள்ளப்பட்டது – நடப்பட்டு பராமரிக்கப்படும் மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்யக் கோருதல் – சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,      அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மரம் நடும் திட்டத்தின்கீழ் மரம் நடும் செயல்பாட்டினை மேற்கொள்ளுமாறும், நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கவும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.      எனவே நடப்பட்டு, பராமரிக்கப்படும் மரக்கன்றுகள் எண்ணிக்கை சார்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து நாளை (05.04.2022) மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.