Month: January 2022

தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்குண்டான தேர்தல் தொடர்பான ஆணைகள் வழங்குதல்

CIRCULARS
இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு election-duty-Download இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கள் பள்ளியிலிருந்து ஒருவரை அனுப்பி தேர்தல் வகுப்பு ஆணைகள் நாளை 29-01-2022 அன்று காலை 10. 00 மணிக்கு வேலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2022 – தேர்வு மையம் மற்றும் இணைப்பு பள்ளிகள் சரிபார்க்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2022 தொடர்பாக தேர்வு மையம் மற்றும் இணைப்பு பள்ளிகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மையத்திற்குண்டான இணைப்பு பள்ளிகள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுமாறு தேர்வு மைய மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் கீழ்க்காணும் அலைபேசியில் உடன் தொடர்பு கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திரு. ப. தசரதன், உதவியாளர், 8825819484 திரு. ச. சுரேந்தர் பாபு உதவியாளர் 9442273554 இணைப்பு VelloreDownload முதன்மைக் கல்விஅலுவலர் வேலூர் பெறுநர்

ஆதிதிராவிடர் நலம் -2021-2022ஆம் கல்வியாண்டு ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் -கல்வி உதவித்தொகை – இணையதளத்தில் நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களையும் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), ஆதிதிராவிடர் நலம் -2021-2022ஆம் கல்வியாண்டு ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் -கல்வி உதவித்தொகை - இணையதளத்தில் நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களையும் பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -315-B3-Download CamScanner-01-25-2022-11.35.07Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பொது மாறுதல் கலந்தாய்வு 2022 – 24.01.2022 முதல் 23.02.2022 வரை நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள் / அனைத்துவகை பாட ஆசிரியர்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தெரிவித்தல்

CIRCULARS
அரசு/ நகரவை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு 2022 - 24.01.2022 முதல் 23.02.2022 வரை நடைபெறும்  கலந்தாய்வில் கலந்துகொள்ளும் அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள் / அனைத்துவகை பாட ஆசிரியர்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3857-b2__Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு நாளது தேதியவரையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரத்தினை இனியும் காலதாமதமின்றி உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 25.01.2022 நாளது தேதியவரையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரத்தினை 25.01.2022 மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படியும். சான்றினை 27.01.2022 மாலை 3.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தெரிவித்தும் இதுநாள் வரையில் ஒரு சில தலைமையாசிரியர்கள் உள்ளீடு செய்யாமல் இருப்பது வருந்தத்தக்கது. எனவே, உள்ளீடு செய்யாத தலைமையாசிரியர்கள் உடனடியாக காலதாமதமின்றி 27.01.2022 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்துவிட்டு சான்றினை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

SOP – INSTRUCTIONS FOR CELEBRATING REPUBLIC DAY ON 26TH JANUARY 2022 IN SCHOOLS

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/PRINCIPALS, THE REPUBLIC DAY FLAG HOISTING PROGRAMME SHOULD END BEFORE 9.30 am. FLAG HOISTING PROGRAMME MAY BE ORGANIZED EITHER IN VIRTUAL FORMAT OR PHYSICAL FORMAT DEPENDING ON THE COVID SITUATION. ALL SCHOOL TEACHERS/STAFF TO PARTICIPATE. VIDEOS OF NATIONAL WAR MEMORIAL/ OTHER INFORMATION RELATED TO NATIONAL WAR MEMORIAL (NWM) MAY BE USED TO DISSEMINATE INFORMATION ABOUT NWM. IT MAY BE ENSURED TO FOLLOW THE GUIDELINES ISSUED TIME TO TIME FOR COVID MANAGEMENT BY THE CENTRAL GOVERNMENT / STATE GOVERNMENT. CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE

பதிவு எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு தகுதிவாய்ந்த பணியாளர்களின் விவரங்கள் மற்றும் கருத்துருக்கள் ஒப்படைக்கப்படாத பள்ளிகள் உடன் ஒப்படைக்க கோருதல்

CIRCULARS
இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு RC-TO-JA-NOT-SUBMITTED-SCHOOL-LISTDownload மேற்குறிப்பிட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் தகுதியான பதிவுஎழுத்தர் கருத்துருக்கள் மற்றும் பதவி உயர்விற்கு தகுதியில்லை என்றால் அதற்கான காரணத்தினை 27-01-2022 அன்று பிற்பகல் 03.00 மணிக்குள்வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அ1 பிரிவுஎழுத்தரிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்தபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. முதன்மைக்கல்விஅலுவலர்வேலூர் பெறுநர் சார்ந்தபள்ளிதலைமை ஆசிரியர்கள்

01.01.2022 அன்றைய நிலவரப்படி அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிட்டது. மேல்முறையீடு பெறப்பட்டமை. திருத்திய முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டது. சுழற்சிப் பட்டியல் வெளியிடுதல்- 28.01.2022 அன்று காட்பாடி, அனைவருக்கும் கல்வி அலுவலகத்தில் (SSA) காலை 8.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுதல்

CIRCULARS
அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியலை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 28.01.2022 அன்று காலை 8.30 மணியளவில் காட்பாடி. காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறும் கலந்தாய்வில் கலந்தகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Hr-sec-Hm-panel-PG-Hs.Hm-B-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது – மீளவும் சரிசெய்து அனுப்பக் கோருதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் முழுமையான விவரங்கள் (ACC NO, IFSC CODE, MICR CODE, BANK NAME, BRANCH NAME)  பதிவேற்றம் செய்யப்படாத மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்தும், Long Absent மாணவர்களில் எவரேனும் தேர்வு எழுதியிருப்பின் அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை பூர்த்தி செய்தும் 24.01.2022 க்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் பெறும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பூர்த்தி செய்து பெறப்படாததால் சென்னை, பள்ளி ஆணையரகத்திற்கு தொகுத்து அனுப்ப இயலாத நிலை உள்ளது. என

15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 25.01.2022 நாளது தேதியவரையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரத்தினை 25.01.2022 மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படியும். சான்றினை 27.01.2022 மாலை 3.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் /சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, 15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 25.01.2022 நாளது தேதியவரையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரத்தினை 25.01.2022 மாலை 5.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்,இணைப்பில் உள்ள படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 27.01.2022 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. CLICK HERE TO ENTER THE DETAILS vaccination-certificate2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்