Month: November 2021

தலைமை ஆசிரியர்கள் / வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் – 26.11.2021 மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது – கூட்ட நடவடிக்கைகள்

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள்                 வேலூர் மாவட்டம், அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் 26.11.2021 அன்று வேலூர், லஷ்மி கார்டன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்ட நடவடிக்கைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் HM-Meeting-minutes-26.11.2021Download

சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு மற்றும் நடப்பு 2021-2022ஆம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பில் பயின்ற / பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் 02.12.2021க்குள் பதிவு செய்யக் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12 ஆம் வகுப்பு மற்றும் நடப்பு 2021-2022ஆம் கல்வியாண்டில் 10, 11  மற்றும் 12ஆம் வகுப்பில் பயின்ற / பயிலும் மாணாக்கர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் 02.12.2021க்குள் பதிவு செய்யுமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

TO ALL HMs/Principals – 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வு – பாடத்திட்டம் பள்ளிகளுக்கு அனுப்புதல்

அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, முதன்மைச் செயலரின் அறிவுரைக்கிணங்க 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது, உரிய முறையில் இக்கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புத்ல் தேர்வு பாடத்திட்டத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS OF THE CEODownload 10TH STANDARD ENGLISH MEDIUM COMBINED 10TH STANDARD TAMIL MEDIUM COMBINED 12TH STANDARD ENGLISH MEDIUM COMBINED 12TH S

தமிழ் வளர்ச்சி துறையின் 2021 – 2022 ஆண்டிற்கான – “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தி பரிசுகள் மற்றும் பாராட்டுகள் ஆண்டுதோறும் வழங்குதல் சார்ந்து.

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர், தமிழ் வளர்ச்சி துறையின் 2021 – 2022 ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்க “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி. ஜவகர்லால் நேரு. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின்   பிறந்தநாளன்று  மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பள்ளிக்கு ஒரு மாணவர் வீதம் தெரிவு செய்தமாணவர்களை  30.11.2021 (நாளை ) காலை 10.00 மணிக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. பெயர் பதிவு செய்த மாணவர்களை மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் வகையில் பொறுப்பு ஆசிரியருடன் அனுப்பிவைக்கும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 3350-B4-Tamil-Development-Competition-1Download

ஜனவரி – 2022-ல் நடைபெறும் NTSE தேர்விற்கு விண்ணப்பிக்க காலஆவகாசம் வழங்குதல் – சார்பு.

ஜனவரி - 2022-ல் நடைபெறும் NTSE தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்ய 12.11.2021 முதல் 27.11.2021 வரை பதிவேற்றம் செய்யலாம் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது தற்பொழுது தொடர் மழையின் காரணமாக பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 30.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மேலும் எக்காரணம் கொண்டும் கால அவகசாம் நீட்டிக்கப்படமாட்டாது என்பதை அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலை/மெட்ரிக் / CBSE / ஆங்கிலோ இந்தியன் / கேந்திரா வித்யாலயா ஆகிய பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. பதிவேற்றம் செய்யப்பட்டதை அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களும் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலை/மெட்ரிக் / CBSE / ஆங்கிலோ இந்தியன் / கேந்

All Matric School Principals – Commemoration of the International Day against Violence and Bullying at Schools Including Cyber Bullying – Communicated

CIRCULARS
To All Matriculation / Matriculation Hr.Sec.SChool Principals, Download the attached file and follow the instructions regarding Commemoration of the International Day against Violence and Bullying at Schools Including Cyber Bullying and Take necessary action. Cyber-BullyingDownload Chief Educational Officer, Vellore.

10 மற்றும் 12ம் வகுப்பு முதல் அலகுத் தேர்வு கால அட்டவணை (Revised)

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு முதல் அலகுத் தேர்வு கால அட்டவணையின் படி தேர்வுகள் நடத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது, வினாத்தாட்கள் தேர்வுகள் நடைபெறும் நாள் அன்று வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி இணையதளத்தின் edwizevellore mail ID க்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு தேர்வுக் கால அட்டவணை முதல்-அலகுத்-தேர்வு-கால-அட்டவணை-திருத்தப்பட்டவைDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

NMMS -2021 – 2022 ஆம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை – சார்பாக.

2021 - 2022 ஆம் கல்வியாண்டில் மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் - தேசிய வருவாய் வழி மற்றும் திரன்படிப்பு உதவித் தொகை - NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவேற்றம் குறித்து சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் 29.11.2021 அன்று காலை 10 00 மணி அளவில் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஆ3 பிரிவு உதவியாளரிடம் நேரில் தொடர்பு கொள்ளமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. NMMS-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர், வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு, தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (Trust Examination) ஜனவரி- 2022-ல் தேர்வு நடத்துதல் – அறிவுரைகள் வழங்குதல் – சார்பாக.

ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (Trust Examination) ஜனவரி- 2022 30.01.2022 அன்று தேர்வு நடத்துதல் –  அறிவுரைகள் வழங்குதல்  -  சார்பாக. இணைப்பு : அரசாணைகள் - 2 மற்றும் அறிக்கை TRUST-EXAM-NOTIFICATION-2021-22-2Download G.O.NO_.256-2Download G-.O.-NO.-960-2Download DocScanner-Nov-26-2021-2.47-PMDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், (ஊராகப் பகுதி) தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர் (தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் அனுப்பப்படுகிறது.)

Hi-tec Lab assessment testல் சிறப்பாக பதிலளித்த இணைப்பு பட்டியலில் உள்ள மாணவர்களை ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள NTS தேர்வில் பங்கேற்கும் வகையில் 27 நவம்பர் 2021க்குள் விண்ணப்பிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் தனிகவனம் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சென்னை, மாநில திட்ட இயக்குநர் (சமக்கிர சிக்ஷா)  அவர்களின் அறிவுரையின்படி, நடந்து முடிந்த Hi-tec Lab assessment testல் சிறப்பாக பதிலளித்த இணைப்பு பட்டியலில் உள்ள மாணவர்களை ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள NTS தேர்வில் பங்கேற்கும் வகையில் 27 நவம்பர் 2021க்குள் விண்ணப்பிக்க (இணைப்பு பட்டியலில் உள்ள மாணவர்கள் மட்டும்) தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு NTS தேர்வு கட்டணம் மாநில அரசால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. NTS தேர்வுக்கு  பட்டியலில் உள்ள100 மாணவர்களில் எந்த ஒரு மாணவரின் பெயரும் விடுபடாமல் தேர்வு எழுத தலைமை ஆசிரியர்கள்‘ முழு பொறுப்பு ஏற்க வேண்டும். என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர்,