Month: October 2021

மிக மிக அவசரம்- மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் – இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் கேட்பு தொகை பெற பள்ளி வங்கி கணக்கு சரிபார்த்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் - வேலூர் மாவட்டம் - இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் கேட்பு தொகை பெற கீழ்க்காணும் பள்ளிகள் தங்கள் பள்ளிக்குரிய வங்கி கணக்கு எண்ணினை சரிபார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் வங்கி கணக்கு முதல் பக்க நகல் உடன் சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வங்கி கணக்கு மாற்றம் இருப்பின் முகப்பு கடிதத்துடன் வங்கி கணக்கு முதல் பக்க நகலுடன் ஒப்படைக்க சார்ந்த மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : 2019- 2020 ஆம் கல்வியாண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டிருப்பின் உரிய கடிதத்துடன் தாளாளர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். BANK-ACCOUNT-DETAILS-MATRIC-05-10-2021Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வ

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு ELECTION-REG-SCHOOL-LEAVE-ORDER-5Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது-

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு 2021 – விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் விண்ணப்பம் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு 2021 தொடர்பாக விடைத்தாட்களை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுசெய்ய 04-10-2021 மற்றும் 05-10-2021 ஆகிய இரண்டு நாட்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்ற விவரம் மற்றும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள விவரம் பள்ளி மாணவர்கள். பெற்றோர்கள், மற்றும்பொதுமக்கள் அறியும் வண்ணம் பள்ளி தகவல் பலகை மூலம் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு RV-RT-II-Application-Instructions-to-CEODownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்

04.10.2021 (நாளை) தேர்தல் வாக்கு எண்ணும் பணி தேர்தல் வகுப்பு இல்லாத கணினி ஆசிரியர்கள் அனைவரும் முதன்மைக்கல்வி அலுவலரால் அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் 04.10.2021 காலை 10.00 மணிக்கு நடத்தப்படும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 04.10.2021 (நாளை) தேர்தல் வாக்கு எண்ணும்  பணி தேர்தல் வகுப்பு இல்லாத கணினி ஆசிரியர்கள் அனைவரும் முதன்மைக்கல்வி அலுவலரால் அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூட்டம் நடைபெறும் இடம் : அரசு(முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளி, வேலூர் நாள் : 04.10.2021                              நேரம் : காலை 10.00 மணி தலைமையாசிரியர்கள் சார்ந்த கணினி ஆசிரியரை கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் சார்பான விவரங்கள்.             இன்றைய நிலையில் கோவிட்-19 தொற்று உலக அளவில் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கிடையில் நமது பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை  இயங்கி வருகிறது. மாணவர்கள் 18 குறைவாக இருப்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நிலை உள்ளது. அவர்கள் அச்சமில்லாமலும் நோய்தொற்று இல்லாமலும் பள்ளியில் பயில வேண்டும் எனில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாது.  மாணவர்கள்  எந்தவித இடையூறு இல்லாமல் பள்ளிக்கு செல்லலா

கோவிட் 19 – மெகா சிறப்பு முகாமில் கலந்துகொள்ளும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை Google Sheet Link-ல் காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம் கோவிட் 19 - மெகா சிறப்பு முகாமில் கலந்துகொள்ளும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை Google Sheet Link-ல் காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், மேற்படி பொருள் சார்ந்த ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரைவழங்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைளின்படி செயல்படும்படி வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Mega-camp_Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்டம் – ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021- தேர்தல் வாக்குச் சாவடி மையமாக செயல்படவுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை.

CIRCULARS
அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டம் - ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021- தேர்தல் வாக்குச் சாவடி மையமாக செயல்படவுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ELECTION-INSTRUCTIONSDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையம் – World Space Week கொண்டாடுதல் – பள்ளி மாணாக்கர்களிடையே போட்டிகள்நடத்துவது – அனைத்து போட்டிகளும் Online வழியாக நடத்தப்படவுள்ளது – மாணாக்கர்கள் கலந்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர்கள், ஸ்ரீ ஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையம் – World Space Week 04.10.2021 முதல் கொண்டாடப்பட உள்ளது. இது சார்பாக பள்ளி மாணாக்கர்களிடையே போட்டிகள் Online வழியாக நடத்தப்படவுள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகள் மற்றும் Brochure பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி, மாணாக்கர்கள் கலந்துக் கொள்ள செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வட்டாரக்கல்வி அலுவலர்கள், தங்கள் ஒன்றித்திற்கு உட்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இவ்விவரத்தினை தெரிவித்து மாணாக்கர்கள் போட்டிகளில் கலந்துகொள்ள நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS - ISRO-Proc-2021Download BROCHURE - 2021-WSW-Adv-Poster-Lec