Month: October 2021

16.10.2021 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 16.10.2021 சனிக்கிழமை அன்று மாணவர் மற்றும் ஆசிரியர் நலன் கருதி அனைத்துவகை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

16-10-2021 அன்று சனிக்கிழமை பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு சென்னை பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறை ந.க.எண் 34462 / பிடி1 / இ1 / 2021 நாள் 13-10-2021ன்படி 14-10-2021 மற்றும் 15-10-2021 ஆகிய இருநாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதிநாளான சனிக்கிழமை 16-10-2021 அன்று அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி ஆணை பெறப்பட்டுள்ளது. எனவே வேலுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் 16-10-2021 சனிக்கிழமை விடுமுறை நாளாகும் என அறிவிக்கப்படுகிறது. இணைப்பு school-leave-Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு 18.10.2021 அன்று காலை 8.00 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறுதல்

CIRCULARS
சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள், வேலூர் மாவட்டம் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு 18.10.2021 அன்று காலை 8.00 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்களை உரிய நாள் மற்றும் நேரத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கலந்தாய்வு நாள் : 18.10.2021 நேரம் : காலை 8.00 மணி கலந்தாய்வு நடைபெறும் இடம் : காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம் (SSA) BRT

அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்கள், ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரம் 08-10-2021 நிலவரப்படி கோருல்

அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு non-teaching-vacancy-details-regDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

9 முதல் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வக வழி மாநில அளவிலான மதிப்பீடு நடத்துதல்.

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 9 முதல் 12ஆம் வகுப்புகளில் பயிலும்  மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வக வழி மாநில அளவிலான மதிப்பீடு  நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளைமற்றும் அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Insructions-to-conduct-evaluation-using-by-High-tech-LabDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – அரசு/நகராட்சி/நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2020-2021 நிதியாண்டிற்கான மாநில பட்டயக்கணக்காளரின் தணிக்கை மேற்கொள்ளுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி/நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  - அரசு/நகராட்சி/நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு  பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2020-2021 நிதியாண்டிற்கான மாநில பட்டயக்கணக்காளரின் தணிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கோப்புகளை பதிவிக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகராட்சி/நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RMSA-AUDIT-PROCDownload SMDC-Audit-Report-Format-2020-2021Download RMSA-All-UCs-2020-21-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

INSPIRE AWARD – 2021 – REGISTRATION TO BE DONE IMMEDIATELY – VERY URGENT

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம், புத்தாக்க அறிவியல் ஆய்வுமானக் விருது 2021-2022 – இந்த ஆண்டிற்கான புதிய பதிவுகள் பதிவு செய்ய ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு, இது நாள் வரைஎந்தவொரு பள்ளியிலும் மாணவர்கள் பெயர்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளது. உடனடியாக இணையதளம் வழியாக பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS - 2652-b1Download Inspire-Instructions_20210927_0001Download

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நவம்பர் 2021 விண்ணப்பம்பெறுதல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் 11-10-2021 முதல் 18-10-2021 வரை (14-10-2021 முதல் 17-10-2021 வரைவிடுமுறை நாட்கள் தீவிர்த்து) விண்ணப்பங்கள் அளித்து பதிவு செய்தல் தொடர்பான செய்திக் குறிப்பு சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அச்செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இச்செய்தியினை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ப பொதுமக்கள் அறியும் வண்ணம் தங்கள்பள்ளியின் தகவல் பலகை மூலமாக தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் விவரம் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வேலுர்நகரவை மகளிர் மேல்நிலை

ALL MATRIC SCHOOL PRINCIPALS – GOVERNMENT OF INDIA – WORLDD MENTAL HEALTH DAY OBSERVED ON 10th OCTOBER, 2021 – SCHOOLS MAY UNDERTAKE SUGGESTED ACTIVITIES – REG

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் கீழ்க்காணும் அரசு கடிதத்தில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி அது சார்பாக தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரியப்படுத்தி உடன் நநடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், World-Mental-Health-DayDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தாளாளர்கள் / முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்