அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
1. தங்கள் பள்ளியில் செய்முறைத் தேர்வு நடைபெறும் நாள் அன்று பள்ளி தலைமை ஆசிரியர் கட்டாயம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.
2. செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் பள்ளியில் புறத்தேர்வாளர்கள் முன்னிலையில் செய்முறைத் தேர்வு நடைபெறவேண்டும்.
3. செய்முறைத் தேர்வு நடைபெறும் நாள் அன்று குறிப்பிட்ட நேரத்தில் தேர்வுகளை துவங்கி குறிப்பிட்டுள்ள நேரத்தில் தேர்வுகளை முடிக்கப்படல் வேண்டும்.
4. செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் நாள் மற்றும் நேரத்தினை மாணவர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படல் வேண்டும்.
5. செய்முறைத் தேர்வுகள் சார்பான மந்தன கட்டுக்களை உரிய நேரத்திற்குள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அரசு/நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2019-2020 – ம் கல்வியாண்டில், உடற்கல்வி இயக்குநர் நிலை - II ஆகப் பதவி உயர்வு அளிப்பது சார்ந்து 01.01.2019-ல் உள்ளவாறு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக கருத்துரு கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவத்தை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் ஒரு நகலை இவ்வலுவலக ‘ஈ1’ பிரிவில் 14.02.2019 அன்று மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORMAT
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து மேல்நிலை தேர்வு மைய தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் (TOP SHEETS) மற்றும் எழுதுபொருட்கள் பெற்றுச் செல்ல கீழ்கண்ட கல்வி மாவட்டத்தை சார்ந்த தேர்வு மைய தலைமையாசிரியர்கள் எதிரே குறிப்பிட்டுள்ள அலுவலகம்/ பள்ளியில் குறிப்பிட்டுள்ள தேதியில் பெற்றுச் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE DD
CEO, VELLORE.
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை,
6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான 3ம் பருவ பாடத்திட்டங்கள் உரிய நாட்களுக்குள் எவ்வித தொய்வுமின்றி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஒரு சில பள்ளிகளில் மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் பெறப்பட்டுவரும் நிலையில் அனைத்துப்பள்ளிகளிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் சரளமாக வாசித்தல், தவறின்றி எழுதுதல், அடிப்படை கணித அறிவு,ஆங்கில அகராதி பயன்படுத்த பயிற்சி, நாள் தோறும் தமிழ் மற்றும் ஆங்கில செய்தித் தாள் வாசிக்கும் பயிற்சி, பள்ளி நூலக புத்தகங்கள் பயன்படுத்த அனுமதித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளது- பூர்த்தி செய்து தயார்நிலையில் வைக்கவும்). மேலும், மேற
சார்ந்த அரசு பள்ளி தலைமையாசிரியர்கள்,
2018-19ம் கல்வியாண்டு- அனைத்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை-Attendance மூலம் தினசரி பதிவேற்றம் மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளி தலைமையசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
Attendance App _Modified-2_ _Final_Tamil Letter
ATTENDANCE APP - NOT MARKED SCHOOL LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2018-19ம் நிதியாண்டு - யோகா ஒலிம்பியாட் போட்டிகள் - கல்வி மாவட்ட, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.