சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
இணைப்பில் உள்ள பள்ளிதலைமையாசிரியர்களின் பட்டியலை பதிவிறக்கம் செய்து அதில் இடம் பெற்றுள்ள கைபேசி எண்ணில் தொடர்புகொள்ள இயலாத நிலை உள்ளது. எனவே, முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொள்ள ஏதுவாக BSNL CUG கைபேசி எண் உள்ள தலைமையாசிரியர்கள் உடனடியாக அதனை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இதுவரை BSNL CUG கைபேசி எண் பயன்படுத்தாமல் இருப்பதற்கு தக்க விளக்கத்தினை 25.07.2018க்குள் அனுப்பிவைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE UNATTENDED CELL NO.s
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு ஆண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 தேர்வு முடிவுகள் சார்பான கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த செய்தி.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்விஅலுவலர்கள்
வேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி /HSE June Result Press Release 2018(1)
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு வணக்கம்,
EMIS குறித்தான தகவல்
EMIS இணைய தளத்தில் கீழ்கண்ட பள்ளிகள் குறிப்பிட்டுள்ள நாட்களில் அவற்றிக்கு எதிரே குறிப்பிட்டுள்ள அலுவலகத்திற்கு மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் நாளது தேதி நிலவரப்படி பதிவிறக்கம் செய்யப்ட்ட EMIS Front Page Copy-யுடன் தனி நபர் ஒருவரை அனுப்பி பதிவுகளை சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகள்
நாட்கள்
சரிபார்க்க வருகைபுரிய வேண்டிய அலுவலகம்
சரிபார்க்க வேண்டிய அலுவலர்
PRIMARY & MIDDLE
NURSERY & PRIMARY SCHOOL
25.07.2018 மற்றும் 26.07.2018
சார்ந்த CRC மையம்
சார்ந்த BRC Supervisor
ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOLS
27.07.2018
சார்ந்த BRC மையம்
சார்ந்த BRC Supervisor
MATRIC & CBSE SCHOOLS
30.07.2018
சார்ந்த BRC மையம்
சார்ந்த BRC Supervisor
அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு,
11ம்வகுப்பு போதிக்கும் மெட்ரிக் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் குறித்து பயிற்சி இணைப்பில் உள்ள கால அட்டவணை படி அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் (இணைப்பில் கண்டுள்ளபடி) நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. சார்ந்த பாட ஆசிரியர்களை குறிப்பிட்டுள்ள நாளில் பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE SCHEDULE
பயிற்சி நடைபெறும் மையத்தில் கருத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சி சிறப்பாக நடைபெற கருத்தாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TRUST EXAM APPLICATION UPLOAD DATE CHANGE
செப்டம்பர் 2018-ல் நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் 11.07.2018 முதல் 25.07.2018 வரை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கி, பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களை 19.07.2018 வியாழக்கிழமை பிற்பகலில் இருந்து பதிவேற்றம் செய்து (UPload) 31.07.2018க்குள் முடிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்
CEO, VELLORE.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
21.07.2018 (நாளை) அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளிகளும் 21.07.2018 அன்று வேலை செய்யும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.