NEET தேர்வு பயிற்சி-நாளை (05.04.2018) முதல் வேலூர் மாவட்டத்தில் உள்ள 22 மையங்களில் நடைபெறுதல் – மாணவர்களுக்கு தகவல் வழங்கி பங்குபெறச்செய்ய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்
அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டத்தில் NEET தேர்வுக்கு ONLINEல் பதிவு செய்த அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி மாணவர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) பட்டியலில் குறிப்பிட்டுள்ள NEET தேர்வு பயிற்சி மையத்தில் (22 பயிற்சி மையங்கள்) நாளை (05.04.2018) முதல் கலந்துகொள்ள தங்கள் பள்ளி மாணவர்களுக்கு விவரம் தெரிவிக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர், அமேநிப, மேல்பட்டி, அமேநிப, பூட்டுத்தாக்கு, அமேநிப, விரிஞ்சிபுரம், ஆம்பூர் கூட்டுரவு சர்க்கரை ஆலை மேநிப, வடபுதுப்பட்டு, தி.மு.கி. அ(ஆ)மேநிப, காங்கேயநல்லூர் ஆகிய மையங்களில் ஆங்கில வழி (ENGLISH MEDIUM) பயிற்சி தேர்வு செய்துள்ள மாணவர்கள் வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.