Month: March 2018

ALL HSC EXAM MARCH/APRIL CHIEFS – அறைகண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு, சில மேல்நிலை பொதுத்தேர்வு மையங்களில் அறைகண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு பணி விடுவிப்பு செய்து அல்லது குறைவான பணி ஒதுக்கீடு செய்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு கூடுதல் நாட்கள் அறைகண்காணிப்புப்பணி வழங்கப்படுவதாக தகவல் பெறப்பட்டுள்ள நிலையில்,  ஒவ்வொரு தேர்வு மையத்திலும் கட்டாயம் முதுகலை ஆசிரியர்களுக்கு அனைத்து மேல்நிலைத்தேர்வு நாட்களிலும் அறைகண்காணிப்புப் பணி ஒதுக்கீடு செய்து தேவைப்படும் இடங்களுக்கு மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை அறை கண்காணிப்புப்பணி வழங்கிட முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கோரப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மாநில அரசு பாடதிட்டம் அல்லாத பிற வாரிய பள்ளிகள்- சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., ஐ.பி. உள்ளிட்ட அனைத்து வகையான பிற வாரிய பள்ளிகள் – பள்ளி கல்வித்துறையின் அங்கீகாரம் பெற்று இயங்குதல்

CIRCULARS
மாநில அரசு பாடதிட்டம் அல்லாத பிற வாரிய பள்ளி முதல்வர்கள், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 18(1)ன்படி அனைத்துவகையான பள்ளிகளும் அரசின் அங்கீகாரம் பெற்றே இயங்க வேண்டும் எனவும் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் இயங்க அனுமதிக்கக்கூடாது எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்ள்ளது. எனவே, தமிழ்நாடுபள்ளிக் கல்வித்துறையின் அங்கீகாரம் பெறாமலும், தொடர் அங்கீகாரம் இல்லாமலும் செயல்பட்டுவரும் மாநில பாட வாரியம் அல்லாத சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., ஐ.ஜி.சி.எஸ்.இ., ஐ.பி., போன்ற பள்ளிகளுக்கான விவரங்களுடன் சார்ந்த பள்ளி முதல்வர்கள் 08.03.2018 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் முதன்மைக்கல்விஅலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (NEET) (UG), 2018- ADMISSION NOTICE – LAST DATE 09.03.2018 -MOST URGENT

CIRCULARS
அனைத்துஅரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,        இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி NEET 2018 தேர்விற்கு விண்ணப்பிக்க 09.03.2018 இறுதி நாளாக உள்ள நிலையில், அது சார்பான அறிவிப்பினை பள்ளி தகவல் பலகையில் ஒட்டிவைப்பதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து விருப்பமுள்ள மாணவர்களை தேர்வெழுத விண்ணப்பிக்க ஊக்குவிக்குமாறும், விண்ணப்பித்தல் சார்பான சந்தேகங்களை மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பக் கட்டணம் செலுத்த இயலாத தகுதியும் திறமையும் உள்ள மாணவர்கள் இருப்பின் தலைமையாசிரியர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் உதவியுடன் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.                 தங்கள் பள்ளியில் NEET தேர்வு 2018ற்கு Online மூலம் www.cbseneet.nic.in இணையதளத்தில்  விண்ண

கல்வி உதவித்தொகை திட்டம் 2018-19ம் ஆண்டு- பள்ளிகள் விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் சார்பான அறிவுரை

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை நடைமுறைப்படுத்துதல்-பள்ளிகளின் விவரங்களை மைய அரசின் இணைய தளத்தில் இணைப்பில் உள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING NATIONAL SCHOLARSHIPS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ALL HSC EXAM 2018 CONCERNED HMs/ CENTRE CHIEFS – INSTRUCTIONS REGARDING +1, +2 TOPSHEET MISSING

CIRCULARS
ALL HSC EXAM 2018 CONCERNED HMs/ CENTRE CHIEFS ,  +1 மற்றும் +2 பொதுத்தேர்வு எழுதும்மாணவர்களின் முகப்புத்தாள் இதுநாள்வரை கிடைக்கப்பெறாதவர்கள் இன்று (03.03.2018) மாலை 5.30 மணிக்குள் கீழ்கண்ட தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தகவல்அளிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. 9442273554 & 9385202009 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ALL GOVT./GOVT AIDED HIGH & HR.SEC.SCHOOL HMs-2017-18ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ ஆய்வுக்குழு கட்டணம் – விவரம் கோருதல்

CIRCULARS
வேலூர் வருவாய்மாவட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 2017-18ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ ஆய்வுக்குழு கட்டணம் குறித்த விவரம் சார்பான சுற்றறிக்கையினை பதிவிறக்கம்செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்ளபடி கீழே கொடுக்கப்படுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் முதன்மைக்கல்விஅலுவலக ‘அ3’ பிரிவில் படிவம் மற்றும் காசோலையினை நேரில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR REGARDING Medical-Committee-fees முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ALL HSC EXAM MARCH/APRIL 2018 CHIEF SUPERINTENDENTS – INSTRUCTIONS REGARDING ABSENTEES ENTRY DGE WEBSITE

CIRCULARS
அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு, மேல்நிலைப்பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – தேர்வு நாளன்றே வருகைபுரியாத மாணவர்களின் விவரத்தை பிற்பகல் 2.00க்குள் அரசுத்தேர்வுகள் இயக்கக இணைய தளத்தில் உள்ளீடு செய்யுமாறு முதன்மைக்கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்படுகிறது. இதில் தனி கவனம் செலுத்திட அனைத்து முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.