வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் (அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ/ கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ) 2017-18ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி வருகைப்பதிவேட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ( 1 முதல் 12ம் வகுப்பு வரை New Entry ) EMIS/ AADHAR/ PHOTO பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் 18,500 மாணவர்களுக்கு தங்கள் பள்ளிகளில் புதிதாக பதிவுகள் மேற்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள பதிவேற்றம் செய்யப்படாத மாணவர்களுக்கு 24.02.2018க்குள் சம்மந்தப்பட்ட மாணவர்களின் ஆதார் பதிவுகளுடன் பதிவேற்றம் மேற்கொள்ள தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட நாட்களுக்குள் EMIS பணிகள் முடிக்கப்படாத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் துறைக்கு உரிய விளக்கத்தை அளிக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது. எனவே, EMIS/ AADHAR/ PHOTO பதிவேற்றத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு உரிய காலத்திற்குள் முடித்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒவ்வொரு பள்ளிகளின் EMIS/ AADHAR/ PHOTO பதிவேற்றம் செய்த விவரத்தை தங்கள் பள்ளிக்குரிய USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி DATA என்ற இணைப்பில் சென்று பதிவிறக்கம் செய்து சரிபார்த்து நிலுவை பதிவுகளை உரிய தினங்களுக்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE aadhaar Status_report_from EMIS-21-02-2018
CLICK HERE TO DOWNLOAD HERE EMIS_Photo_Progress_Report_21-02-2018
CLICK HERE TO DOWNLOAD THE U-DISE-2017-18-for-EMIS-AADHAAR-PHOTO STATUS-Compare-21-02-2018
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்