To HEADMASTERS OF ALL HIGH & HR. SEC. SCHOOLS,
சுற்றறிக்கை
அன்புள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்.
அனைத்து அரசு / நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 10ம் வகுப்பு பாடங்களுக்கான சிறு தேர்வு (Slip Test) வினாக்கள் Website மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இத்தேர்வினை 03.09.2018 (திங்கட்கிழமை) முதல் மாலை நேர வகுப்பில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி வழங்கலாம். தங்கள் பள்ளியின் பாட ஆசிரியர்களின் விருப்பத்தின்படி தலைமை ஆசிரியர்கள் தேவை ஏற்படின் தேர்வு நாட்களை மாற்றம் செய்துகொள்ளலாம். இத்தேர்வுகள் Test Noteல் எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இத்தேர்வு மாணவர்களுக்கு எழுத்துப்பயிற்சி அளிக்கும்பொருட்டு உள்ளதால் சிறுதேர்வு வினாக்களை முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரியபடுத்தி நடத்தலாம். இவ்வினாத்தாட்களை மாணவர்களுக்கு தற்போது நகல் எடுத்து கொடுக்க வேண்டாம்– பாட ஆசிரியர்களுக்கு மட்டும் நகல் எடுத்து கொடுக்கவும். ஓரிரு வாரங்களில் அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து பாடங்களுக்கும் வழங்கப்படும். தொழிற்கல்வி பாடங்களை பொறுத்தவரை பள்ளி அளவிலேயே சிறு தேர்வுகளை திட்டமிட்டு நடத்தலாம். இச்செயல்முறைகளை பாட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் திட்டமிட்டு செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
இணைப்பு: 10ம் வகுப்புகளுக்கான சிறு தேர்வு வினாக்கள்