10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 2021 தேர்வு எழுத தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் வரவேற்றல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 2021 தேர்வு எழுத தனித்தேர்வர்கன் விண்ணப்பங்கள் வேலுர் மாவட்டத்தில் கீழ்க்குறிப்பிட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை யத்தில் 07/08/2021 முதல் 11/08/2021 வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு மற்றும் கடிதம் இணைத்து அனுப்பப்படுகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் தங்கள் பள்ளியின் தகவல் பலகை மூலமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சேவை மைய பள்ளிகளின் விவரம்

1. அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வேலுர்

2. நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி  தோட்டப்பாளையம்

3. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி காட்பாடி

இணைப்பு

HSE – First Year – Sept 2021 – Instructions for Private Candidates

SSLC AND HSE FIRST YEAR NOTIFICATION AND TIME TABLE

Letter to CEO – Nodal centre instructions

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.