ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தினரால் World Space Week 04.10.2022 முதல் 10.10.2022 வரை கொண்டாடுதல் சார்பாக.

தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்

தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை  நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகள் அனைத்து வகை மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்

ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தினரால் World Space Week 04.10.2022 முதல் 10.10.2022 வரை கொண்டாடுதல் தொடர்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் அறிவியலில் ஆர்வம் கொண்ட மாணாக்கர்களை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து வகை பள்ளி மாணாக்கர்களிடையே அறிவியல் சார்ந்த போட்டிகள் 07.10.2022 முதல் 09.10.2022 வரை நடத்த திட்டமிடப்பட்டு, அனைத்து போட்டிகளும் வேலூர் மாவட்டம், VIT நிறுவனத்தில் நடத்தப்படவுள்ளது. பங்கு பெறும் அனைத்து மாணாக்கர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். இந்நிகழ்வு பள்ளி மாணவர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பாக அமையும். எனவே அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விண்வெளி சார்ந்த அறிவை மாணாக்கர்கள் பெறும் வகையில் இந்நிகழ்வினை பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்