வேலூர் மாவட்டம் – குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஒன்றியங்களில் உள்ள அரசு மேனிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் வட்டாரக்கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 23.11.2022 முதல் தொடங்கவுள்ள “கலைத்திருவிழா” முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட விவரம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நாளை 23.11.2022 காலை 10.30 மணியளவில் குடியாத்தம், KMG அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அனைத்துத் தலைமையாசிரியர்களும் உரிய விவரங்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்), குடியாத்தம். மற்றும் பேர்ணாம்பட்டு கலைத்திருவிழா கண்காணிப்பு அலுவலர்