வேலூர் மாவட்டம் – குடிநீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – சார்பு.

தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம், அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, 20.08.2022 அன்று வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் “நம்ம ஊரு சூப்பரு” என்ற சிறப்பு சுகாதார இயக்கத்தினை 20.08.2022 முதல் 02.10.2022 வரை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் சுகாதாரம், குடிநீர், கழிப்பறை சுத்தம் மற்றும் பள்ளி வளாக தூய்மை தொடர்பாக பள்ளி மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. எனவே அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்