அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
மார்ச் 2020ல் நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு நாட்களில் வருகை புரியாத மாணவர்களின் விவரங்களை தேர்வு நடைபெறும் நாளன்றே அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படவேண்டும் என அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
சில தேர்வு மையங்களில் மாணவர்களின் வருகை புரியாத விவரங்களை உள்ளீடு செய்யப்படவில்லை என சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து தகவல்கள் பெறப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பு
அனைத்து மாணவர்களும் வருகை புரிந்திருந்தால் ALL PRESENT என்ற விவரத்தினை உள்ளீடு செய்யுமாறும் அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்