மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்பட்ட அறைக் கண்காணிப்பாளர்கள் சிறப்பு கவனத்திற்கு
மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்விற்கு தேர்வு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட அறைக் கண்காணிப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்று தங்களது பணியினை உறுதிசெய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எக்காரணம் கொண்டு தேர்வு பணி இரத்து செய்யவோ மாற்றம் செய்யவோ இயலாது எனதிட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. சார்ந்த அறைக்கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
மேல்நிலை பொதுத் தேர்விற்கு நியமனம் செய்யப்பட்ட அறைக்கண்காணிப்பாளர்கள்
நகல்
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.