மேல்நிலை இரண்டாமாண்டு 24.03.2020 அன்று நடைபெற்ற தேர்வினை எழுத முடியாத தேர்வளர்களுக்கு மறு தேர்வு சார்பான அறிவுரைகள்

அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

24/03/2020 அன்று மேல்நிலை இரண்டாமாண்டு நடைபெற்ற தேர்வினை எழுத முடியாத பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத விரும்பி பள்ளி தலைமை ஆசிரியரை அணுகினால் அந்த மாணவருக்கு மட்டும் உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும்.  மறு தேர்வு எழுதுவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளாத பிற மாணவர்களின் நுழைவுச்சீட்டுக்ளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.  புதிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களில்  HSC RE EXAM FOR ABSENTEES  என குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதை அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பு

27/07/2020 அன்று தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பயின்ற பள்ளிக்கு வருகை புரிந்து தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் மட்டுமே  சார்ந்த மாணவனுக்கு தேர்வு எழுதுவதற்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து வழங்கப்படவேண்டும். விருப்பம் தெரிவிக்காத மாணவர்களுக்கு தேர்வு நுழைச்சீட்டு பதிவிறக்கம் செய்யப்பட கூடாது என திட்டவட்டமாக  தெரிவிக்கப்படுகிறது. விருப்பம் தெரிவிக்காத மாணவர்களின் நுழைவுச்சீட்டுக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டால் அதற்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே முழுபொறுப்பு ஏற்க்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு

HMs instructions for reexam HSE 2nd year

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

‘அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்

திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.