மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே விண்ணப்பித்தல் மற்றும் மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு வழங்குதல் சார்பான அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 தேர்வு முடிவுகள் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு பயின்ற பள்ளியிலேயே விண்ணப்பித்தல் ,  தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமாக விண்ணப்பித்தல் சார்பான அறிவுரைகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு வழங்குதல் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை சார்பான அறிவுரைகள் இத்துடன்இணைத்து அனுப்பலாகிறது. சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகள் பின்பற்றி செயல்படுமாறு  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

HSE 2ND YEAR STATEMENT OF MARKS AND SCAN AND RETOTAL APPLICATION HM INSTRUCTIONS REVISED

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்

திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.