மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021 – பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021  பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு 29-07-2021 முதல் 31-07-2021 வரை வழங்கப்பட்டுள்ளது. இப்பொருள் சார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு உடன் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு =  பெயர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் மேற்கொள்ள இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி செயல்பட வேண்டும். இவ்வாய்ப்பினையும் தவறவிட்டு  மீளவும் திருத்தங்கள் உள்ளது என மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களிடமிருந்து கருத்துருக்கள் பெறப்பட்டால் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. திருத்தங்கள் மேற்கொள்ள இதற்கு பின் வாய்ப்புகள்வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு

After +2 Result Release N R Correction – Final C orrection

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.