தேர்வுகள் // மிக அவசரம் // தனி கவனம் //
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மே 2021ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம் தேர்வு மையம் வாரியாக Revised DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சரியாகவுள்ளதா மற்றும் பள்ளியின் பெயர் சரியாகவுள்ளதா என சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
DCS Report ல் பள்ளிகளின் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ, மாணவர்களின் எண்ணிக்கை மாற்றங்கள் இருந்தாலோ அல்லது பள்ளியின் பெயர்களில் திருத்தங்கள் இருந்தாலோ உடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியில் தொடர்பு கொண்டடோ அல்லது Whatsapp செயலி மூலம் திருத்தங்களின் விவரங்களை தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருத்தங்கள் சார்பான கடிதத்தினை 04-03-2021 அன்று மாலை 03.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் B4 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திரு. எஸ். சுரேந்தர் பாபு, தேர்வுகள் பிரிவுஎழுத்தர் = 9442273554 / 9488880036
இணைப்பு
VELLORE DIST REVISED DCS Report 2021
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.