மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் பெறுதல்

வேலுர் மாவட்ட அரசுத் தேர்வுத் துறை சேவை மைய பள்ளி தலைமை ஆசியர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு

மே 2021ல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள வேலுர் மாவட்ட அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் மேலும் இது தொடர்பாக சென்னை அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இச்செய்தியினை தங்கள் பள்ளிகளில் அறிவிற்பு பலகை  மூலம் பொதுமக்கள் அறியும் வண்ணம் தெரிவிக்குமாறு வேலுர் மாவட்ட அரசுத் தேர்வுத் துறை சேவை மைய பள்ளி தலைமை ஆசியர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

வேலுர் மாவட்டத்திலுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மைய பள்ளிகளின் பெயர்கள்

1. நகரவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தோட்டப்பாளையம்

2, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி காட்பாடி

3.அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வேலுர்

 

இணைப்பு

Press Release – +2 Pvt Candidates Notification – May 2021

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

வேலுர் மாவட்ட அரசுத் தேர்வுத் துறை சேவை மைய பள்ளி தலைமை ஆசியர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ள முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.