மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க கோருதல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை சான்று ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தனிகவனம் செலுத்தி இன்று (09.05.2019) மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமையாசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE CERTIFICATE

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.