அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் முழுமையான விவரங்கள் (ACC NO, IFSC CODE, MICR CODE, BANK NAME, BRANCH NAME) பதிவேற்றம் செய்யப்படாத மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்தும், Long Absent மாணவர்களில் எவரேனும் தேர்வு எழுதியிருப்பின் அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை பூர்த்தி செய்தும் 24.01.2022 க்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் பெறும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பூர்த்தி செய்து பெறப்படாததால் சென்னை, பள்ளி ஆணையரகத்திற்கு தொகுத்து அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே, சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி மாணவர்களின் விவரங்களில் எவ்வித கலங்களும் விடுதலின்றி முழுமையாக பூர்த்தி செய்து இன்று (25.01.2022) மாலை 5.00 மணிக்குள் velloreceo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.