அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
இதுவரை கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விவரத்தினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாதவர்கள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் விவரத்தினை உடனடியாக உள்ளீடு செய்யும்படியும் உள்ளீடு செய்யாத பட்சத்தில் அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என கருதி No work No Pay அடிப்படையில் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள்.
எனவே, இதனை கருத்தில்கொண்டு சார்ந்த தலைமையாசிரியர்கள் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தினை EMISல் உள்ளீடு செய்ய (Staff login செய்து உள்ளீடு செய்ய வேண்டும்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிக மிக அவசரம்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்