//மிக மிக அவசரம்// அரசாணை எண்.19, நாள்.27.01.2025இன்படி தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்தது – IFHRMSஇல் பதிவேற்றம் செய்யாமல் இருப்பின் அதன் விவரம் கோருதல் – தொடர்பாக.

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

கீழே கொடுக்கப்பட்டுள்ள அரசாணை எண்.19 ப.க.து.பக5(1) நாள்.27.1.2025ன்படி தற்காலிக பணியிடங்களாக இருந்த (Temporary Post) 47013 பணியிடங்கள் மேற்காண் அரசாணையின்படி நிரந்தர பணியிடமாக (Permanent post) கடந்த ஜனவரி மாதம் மாற்றி ஆணை வெளியிடப்பட்டது.

தங்கள் பள்ளியின் Post Occupancy Report-ஐ Download செய்து இவ்வாரசாணையின்படி IFHRMSஇல் நிரந்தர பணியிடமாக மாற்றப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறும், பதிவேற்றம் செய்யாமல் (அனைத்து பணியிடங்கள் – தலைமையாசிரியர்/முதுகலை/பட்டதாரி/இடைநிலை/சிறப்பாசிரியர்/அலுவலகப் பணியாளர்கள்) இருப்பின் அதன் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Sheet Link-இல் பூர்த்தி செய்துவிட்டு, அதன் நகலை இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1VA9y-BvGBbnFEuPbN9rP8HWmLQrCz4OM20FsLrRgsLI/edit?usp=sharing