மடிக்கணினி விவரம் சமர்ப்பிக்காத பள்ளிகள் – 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்கள் நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளித்தலைமையாசிரியர்கள் நாளை (24.12.2019) காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்க கோருதல்

அரசு/ அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள்

2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்கள் நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளித்தலைமையாசிரியர்கள் நாளை (24.12.2019) காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு / அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தொகுத்தனுப்ப வேண்டிய நிலையில் உள்ளதால் இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி உடன் சமர்ப்பிக்குமாறு அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாமதமாக சமர்ப்பிக்கப்படும் பள்ளிகளுக்கு மடிக்கணினி பெற்று வழங்க இயலாத நிலை ஏற்படின் விளைவுகளுக்கு சார்ந்த தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

நாளை காலை 10.00 மணிக்குள் சமர்ப்பிக்காத பள்ளிகளின் விவரங்கள் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்