அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
பிப்ரவரி 2018 மாதத்திற்கான ஆசிரியர் குறைதீர்வு நாள் (தேர்வுநிலை/ சிறப்புநிலை/ பணிவரன்முறை/ தகுதிகாண்பருவம்) மற்றும் இதர குறைகள் சார்ந்து வரும் 10.02.2018 சனிக்கிழமை 9.30 முதல் பிற்பகல் 3.00 மணி வரை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும். மேற்படி குறை தீர்வு நாளில் சார்ந்த ஆசிரியர் கலந்துகொள்ளுமாறும் மேற்காணும் இனங்களில் அனைத்து கல்வி சான்றுகள் உண்மை தன்மை பெற்று முறையாக பதிவு செய்து தகுதியாக உள்ளவர் சார்ந்து கருத்துருக்கள் மட்டுமே அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் முழுமைபெறாத கருத்துருக்களை அனுப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.