பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் 2025 செப்டம்பர் மாதம் பணிபுரிந்த விவரம் – கோருதல் – தொடர்பாக.

SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் செப்டம்பர் 2025 மாதத்தில் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து செப்டம்பர் 2025 மாதத்தின் தெளிவான வருகைப் பதிவேட்டின் நகலை இணைத்து தனிநபர் மூலமாக 10.10.2025 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி தவறாமல் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்பிற்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஆகஸ்டு 2025 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.