SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் பிப்ரவரி-2026 மாதத்தில் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பிப்ரவரி -2026 மாதத்தின் தெளிவான வருகைப் பதிவேட்டின் நகலை இணைத்து தனிநபர் மூலமாக 04.03.2026 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி தவறாமல் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்பிற்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஜனவரி-2026 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
