வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் புதியதாக பணி நியமனம் பெற்று, பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை-1/கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகியோருக்கு புதுமுக பயிற்சி வகுப்பு (INDUCTION TRAINING) 18.02.2026 அன்று சென்னை, கோட்டூபுரம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடைபெறவுள்ளது. எனவே, பயிற்சியில் கலந்து கொள்ள உரிய ஆசிரியர்களை பணியிலிருந்து, பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இடம்: அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், கோட்டூர்புரம், சென்னை
பயிற்சி நடைபெறும் நாள்- 18.02.2026 (புதன்கிழமை காலை 9.00 மணி முதல்)
இணைப்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல்
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.
