வேலூர் மாவட்ட அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு
மாணவர்களின் பெயர் பட்டியல் பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பில் காணும் மாணவர்களில் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிக்காமல் உள்ள மாணவ/மாணவியர்களுக்கு முதலில் Mandatory Biometric Updation-MBU பணிகளை முடித்தல் வேண்டும். முகாமிற்கு, மாணாக்கர்களின் ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் கொண்ட கைபேசியுடன் பள்ளிக்கு ஒரு பொறுப்பாசிரியரை நியமனம் செய்து மாணவர்களை உரிய பாதுகாப்பான முறையில் பங்கேற்க செய்ய அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . மாணவர்கள் தேவையான ஆவணங்களைக் கொண்டு வருவதை உறுதி செய்யவும் ஆதார் அட்டை மற்றும் மொபைலில் அவர்களின் ஆதார் அட்டை OTP பெறப்படும்.
முகாம் நடைபெறும் அட்டவணை
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
