பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – திறன் மேம்பாட்டு பயிற்சி – இணைப்பில் உள்ள கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் பாட முதுகலை   பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் உண்டு உறைவிடப் பயிற்சியாக 01.12.2025 முதல் 18.12.2025 வரை நடைபெறவுள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இடம்: மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர்

பயிற்சி நடைபெறும் நாள்- 01.12.2025 முதல் 18.12.2025 முடிய

இணைப்பு

கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர்

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.